1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (11:54 IST)

முடிக்கு சிறந்த இயற்கை கண்டிஷனராக செயல்படும் கற்றாழை !!

கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும்போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது.


பொடுகிற்கு  கற்றாழை ஜெல் ஒரு  இயற்கை தீர்வாகும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்கி பொடுகை குறைக்கிறது.

கற்றாழை ஜெல் சருமத்தில் உள்ள வீக்கம் மற்றும் தடிப்புகளை குறைக்க உதவுகிறது. முகப்பரு குறைய சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் சிறப்பாக பயன்படுகிறது.

உலர்ந்த உதடுகளை ஈரப்பதமாகவும் மென்மையானதாகவும் மாற்ற கற்றாழை ஜெல் பயன்படுகிறது.

கற்றாழையை தலையில் தேய்த்து வர தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வதையும் முடி உடைவதையும் தடுக்கும். மேலும் முடிக்கு நல்ல  பளபளப்பும் தரும்.

கற்றாழை முடிக்கு சிறந்த இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது வேர்களிலிருந்து முடியை வளர்த்து பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அவற்றை மென்மையாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கிறது.

கற்றாழை ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஈரப்பதமூட்டும் பண்புகள் இருப்பதால், கற்றாழை துளைகளை இறுக்கவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. கற்றாழை உச்சந்தலையில் தடவுவது பொடுகு குறைக்க உதவுகிறது.