வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (18:20 IST)

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

Weight loss
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உடனே முதலில் சொல்வது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. 
 
காலை எழுந்தவுடன் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை அருந்த வேண்டும்.  சர்க்கரை இல்லாமல் அருந்தும் எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்க உதவும். காப்பி டீ குடிப்பதற்கு பதிலாக இதனை குடித்தால் உடல் எடை குறையும்.  
 
அதேபோல் காலை உணவாக புரோட்டின் சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.  குறிப்பாக ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் சாப்பிடலாம். மதியம் அளவு கடந்த பசி இருக்கும் என்பதால் ஓரளவு சாதம், காய்கறிகள், சாலட் வகைகள் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த சிகப்பு அரிசி, வேகவைத்த சிக்கன், முட்டை சாப்பிடுவது நல்லது. 
 
மாலையில் டீ அல்லது காபி அறிந்து கொண்டால் புத்துணர்ச்சியாக இருக்கும். இரவு உணவிற்கு என தனியாக சமைக்காமல் மதியம் என்ன சாப்பிட்டார்களோ அதை இரவும் சாப்பிடலாம்.  
 
இதனை அடுத்து தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம், இதனை பின்பற்றினால் உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran