சனி, 28 செப்டம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:50 IST)

நெஞ்செரிச்சல் ஏற்படுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Heart Health
சிலருக்கு மிகப்பெரிய தொல்லையாக இருக்கும் நெஞ்செரிச்சல் ஏன் ஏற்படுகிறது? அதை எப்படி தடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.  
 
சாப்பிட்ட உணவு உமிழ் நீருடன் கலந்து செரிமான முடிந்ததும் இரைப்பைக்கு கொண்டு செல்லும். அந்த  இரைப்பையில் உள்ள  கதவு  அமிலத்தை உள்ளே நுழையவிடாமல் தடுக்கும். இந்த கதவு உணவு குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் இருக்கும் ஒரு எல்லைக்கோடு போல் செயல்படுகிறது. 
 
ஆனால்  உணவு குழாயின் தசைகள் காரம் நிறைந்த சூடான குளிர்ச்சியான உணவுகளை தாங்குமே தவிர அமிலத்தை தாங்கும் சக்தி கிடையாது.  சாப்பிட்டவுடன் வலது பக்கமாக படுத்தால் இடுப்பையை சுற்றி இருக்கும் இடது பக்க குடல் இரைப்பையை அழுத்தும். அதன் காரணமாக உணவும் அமிலமும் சேர்ந்து உணவு குழாய்க்கு வந்து விடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. 
 
எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள் மசாலா அதிகம் உள்ள உணவுகள் இரவு நேரத்தில் சாப்பிட கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் உடனே படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும்..
 
எனவே இரவு நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும், சாப்பிட்டவுடன் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும், இந்த இரண்டை கடைபிடித்தாலே நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran