செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (11:58 IST)

சர்க்கரைக்கு சொல்லுங்க NO!!

சர்க்கரை பல தீவிர மருத்துவ நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கும். இவற்றின் விவரம் பின்வருமாறு...


# அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது, உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. 

# அதிகப்படியான சர்க்கரை உயர் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கம் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளை அதிகரிக்கிறது.

#அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் ஆண்ட்ரோஜன் சுரப்பு, எண்ணெய் உற்பத்தி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும், இவை சரும பிரசனை அபாயத்தை அதிகரிக்கும்.

# அதிக சர்க்கரை கொண்ட உணவு இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும், இவை டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணியாக உருவெடுக்கும்.

# அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவு, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மனச்சோர்வை அதிகரிக்கும்.

# சர்க்கரை உணவுகள் AGE-களின் உற்பத்தியை அதிகரிக்கலாம், இது தோல் வயதான மற்றும் சுருக்கங்கள் உருவாவதை துரிதப்படுத்தும்.

# அதிக சர்க்கரை சாப்பிடுவது NAFLD-க்கு வழிவகுக்கும், இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உருவாகும் பிரச்சனையாகும்.

# அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது அறிவாற்றல் குறைவை மோசமாக்கலாம். அதோடு கீல்வாத அபாயத்தை அதிகரிக்கலாம், சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.