செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (18:43 IST)

வால்நட் சாப்பிட்டால் மூளையின் திறன் அதிகரிக்குமா?

மூளைத்திறன் செயல்பாடு குறைவு உள்ளவர்கள் வால்நட் சாப்பிட்டால் மூளை செயல் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
வால்நட் பருப்பில் ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட மூலக்கூறுகள் இருப்பதால் வால்நட் பருப்பை உணவில் ரெகுலராக சேர்த்துக் கொண்டால் மூளையின் செயல் திறன் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் வால்நட்டில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் ஆக்ஸிஜன் ஏற்ற பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும்  ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
தினமும் வால்நட் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம், மனசோர்வு, இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran