வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
Edited by Mahendran