1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (19:04 IST)

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

Cold Water
கோடை காலத்தில் மட்டுமின்றி எந்த காலமாக இருந்தாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டால்தான் பல்வேறு நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
குறிப்பாக கோடைகாலத்தில் தேவையான நீரை பருகவில்லை என்றால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் என்றும் எனவே கோடை காலத்தில் அதிக நீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
நீரிழப்பு ஏற்பட்டால் சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்றும் சிறுநீர் கற்கள் உருவானால் உயிருக்கே ஆபத்தான நிலை கூட ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. நீர் இழப்பை ஈடுகட்ட நாள் ஒன்றுக்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் மோர் இளநீர் ஆகியவற்றை பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 
 
நீர்ச்சத்து குறையும்போது செரிமான பிரச்சனை ஏற்படும் என்றும் அதனால் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தர்பூசணி பழம் நெல்லிக்காய் வெள்ளரி போன்ற உணவுகளை அவ்வப்போது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran