திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (09:11 IST)

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

Sleep
அனைத்து உயிரினங்களும் அவசியமான ஒன்று தூக்கம். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவில் தூங்குவது உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.

  • முதலில் தூங்குவதற்கு சரியான நேர அட்டவணையை உருவாக்குங்கள்
  • தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை
  • இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக படுக்கையில் இருந்து எழுவதும் நல்ல பழக்கம் அல்ல
  • காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது
  • ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
  • தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று நோய்கள் வரலாம்.
  • சரியான ஓய்வு இல்லாதது கண்களையும் பாதிக்கும். மாணவர்கள் இரவில் தாமதமாகப் படிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்
  • மாறாக, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுந்து படிப்பதும் அதிக பலன் தரும்