புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (18:56 IST)

வெயில் தாக்கத்தால் ஏசியை தேடி ஓடிகிறீர்களா? இதை படிங்க!

கோடைகாலத்தில் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏசி இருந்தாலும் அதன் பயன்பாடு சருமத்திற்கு தீங்கும் விளைவிக்கும்.


ஏசியின் பயன்பாடு அதிகரிக்கும்போது அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்துபோய் விடும். ஏனெனில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏசியில் இருந்து வெளிப்படும் செயற்கை குளிர் பெரும்பாலானவர்களின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது.

அதிலிருந்து தற்காத்து கொள்ள அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். உதடுகள் வறட்சி அடைவதை தவிர்க்க அதற்குரிய கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.
 
ஏசியில் இருப்பவர்கள் அறையின் வெப்பநிலையை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மிதமான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சரும பாதிப்பின் தன்மை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம்.
 
தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் அதிகமாக ஏசியை பயன்படுத்துவது உடல் நலக்கோளாறை அதிகப்படுத்திவிடும்.