வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (21:57 IST)

மூச்சுப்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்!

Breathing training
மூச்சு பயிற்சி செய்வது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் நல்லது என்றாலும் தகுந்த பயிற்சியாளரை அருகில் வைத்துக்கொண்டு சில வழி முறைகளை கடைப்பிடித்துக் கொண்டு மூச்சு பயிற்சி செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதலில் சுவாசத்தை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு அதன் பிறகு உள்ளே சில நொடிகள் நிறுத்தி வைத்து அதன் பின் மெதுவாக சுவாசத்தை வெளியே விடுவதற்கு பெயர்தான் மூச்சு பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே நிறுத்தி வைப்பது சாலச்சிறந்தது இப்படி சுவாசம் முறையை உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் உடல் எடை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்பதும் மூச்சு பயிற்சி என்பது ஆஸ்துமா மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு சிறந்த நிவாரணி என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
காலை, இரவு தூங்கும் முன் இரண்டு நேரங்களிலும் மூச்சுபயிற்சி செய்யலாம். ஆனால் அதே நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வதற்கு முன்னர் தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited By Mahendran