1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (16:48 IST)

வெல்லத்தில் வெள்ளம் போல் இருக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம்...

 
வெல்லம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். 
 
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். 
 
வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும். 
 
வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது.  
 
பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம்.  
 
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும். 
 
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.