1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (17:05 IST)

லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதால் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இது உடனடி புத்துணர்ச்சி அளிக்ககூடியது. லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சில...
 
1. லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.
 
2. லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
 
3. லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
 
4. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 குறைபாட்டு நோய் நீங்கும்.