வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (10:42 IST)

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

Agarwal Hospital
இக்கல்வித்திட்டத்தில் அதிகம் ஆர்வமூட்டும் சிகிச்சை நேர்வு விளக்க சமர்ப்பிப்பிற்கு டாக்டர். (திருமதி.) T அகர்வால் விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறுகிறது.


 
சென்னை, 21 செப்டம்பர் 2024: டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் கண் ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு ஆண்டும் கண் மருத்துவவியல் முதுகலை மாணவர்களுக்காக கல்பவிருக்‌ஷா என்ற பெயரில் இரண்டு நாள் தொடர் மருத்துவ கல்வித்திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தாண்டு 17-வது பதிப்பாக நடைபெறும் இந்நிகழ்வு இன்று சிறப்பாக தொடங்கியது. நாடெங்கிலுமிருந்து 250-க்கும் அதிகமான மாணவர்களும், மற்றும் 30 கல்வியாளர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கின்றனர்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநர் புரொஃபசர். அதியா அகர்வால்  மற்றும் இப்பயிலரங்கின் அமைப்பு செயலாளர்களான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களான டாக்டர். சௌந்தரி S, டாக்டர். திவ்யா அசோக் குமார் மற்றும் டாக்டர் ப்ரீத்தி நவீன் ஆகியோர் முன்னிலை வகிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் திரு. ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் இப்பயிலரங்கு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

 முதுகலை மாணவர்களுக்கான கடுவிரைவு பயிற்சி வகுப்பின் மாதிரியில் வடிவமைக்கப்பட்ட இச்செயல்திட்டத்தில், கண் மருத்துவவியலில்  தேர்வுடன் தொடர்புடைய தலைப்புகளில் நிபுணர்களின் சிறப்புரைகள், நாள் ஒன்று அன்று ஒரு வெட் லேப் அமர்வு மற்றும் நாள் இரண்டின்போது ஒரு  வினாடி வினா செயல்திட்டம் ஆகியவை இடம்பெறுகின்றன. பதிவு செய்த முதுகலை பட்டதாரிகள் தேர்வுக்கான நேர்வுகளை இதில் சமர்ப்பிக்கலாம். சிறப்பான சமர்ப்பிப்பாக தேர்வு செய்யப்படும் மருத்துவ நேர்வுக்கு டாக்டர். (திருமதி.) T. அகர்வால் விருது வழங்கப்படும்.

 
இப்பயிலரங்கை தொடங்கி வைத்து திரு. ராஜேஷ் லக்கானி பேசுகையில், “கல்பவிருக்‌ஷா நிகழ்வின் 17-வது பதிப்பை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பான நிபுணர்களோடு கலந்துரையாடி பயனடைவதற்கான ஒரு வாய்ப்பை இளம் கண் மருத்துவவியல்  மாணவர்களுக்கு வழங்கும் இத்தகைய ஒரு கல்வித்திட்டத்தை பார்ப்பது உற்சாகமளிக்கிறது. மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான அவர்களது விளக்க உரைகள் மற்றும் செய்முறை விளக்கங்களிலிருந்து மதிப்புமிக்க தகவல்களையும், அறிவையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பங்கேற்கும் கண் மருத்துவர்களின் திறன்களை இந்த முன்னெடுப்பு மேம்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தங்களது நோயாளிகளுக்கும் மற்றும் சமூகத்திற்கும் இன்னும் சிறப்பான சிகிச்சையையும் மற்றும் சேவையையும் வழங்குவதற்கு அவர்களுக்கு இப்பயிலரங்கு திறனதிகாரத்தை வழங்குமென்பது நிச்சயம்” என்று கூறினார்.

CME  என அழைக்கப்படும் தொடர் மருத்துவக் கல்வியின் பலன்கள் பற்றி குறிப்பிட்ட பேராசிரியர். அதியா அகர்வால், “2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்தே, நாடெங்கிலுமுள்ள கண் மருத்துவவியல் மாணவர்களுக்கு தேசிய அளவிலான முதுகலை பட்டதாரிகளுக்கான தொடர் மருத்துவ கல்வித்திட்டமாக கல்பவிருக்‌ஷா புகழ்பெற்றிருக்கிறது. இந்தாண்டு 35-க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 250-க்கும் அதிகமான மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கண் மருத்துவவியலில் முதன்மையான நிபுணர்களோடு கலந்துரையாடவும் மற்றும் கற்றுக் கொள்ளவும் பங்கேற்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது. இந்நிகழ்வில் இரண்டாவது நாளன்று நடைபெறும் சிகிச்சை நேர்வு குறித்த சமர்ப்பிப்பு ஒரு தனிச்சிறப்பான அம்சமாகும். மருத்துவ சிகிச்சை நேர்வுகளை எப்படி சமர்ப்பிப்பது மற்றும் விவாதிப்பது  குறித்து நடைமுறை ஆலோசனை குறிப்புகளையும், அறிவார்ந்த தகவல்களையும் இந்நிகழ்வில் மாணவர்கள் பெறுகின்றனர்” என்று கூறினார்.