திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2020 ஒரு கண்ணோட்டம்
Written By சினோஜ்
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (20:21 IST)

2020 ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்– கொரோனா வைரஸ்

இயற்கையாகப் பரவியதோ அல்லது மனிதனின் ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கப்படும்போது தெரியாமல் வெளியேறியதோ ஆனால் விவாதத்திற்கிடமின்றி இன்று ஒட்டுமொத்த மக்களும் நிர்கதியற்ற நிலையில் பாதிக்கப்படுள்ளது  ஒற்றைச்சொல்லான கொரோனா வைரஸ் என்ற தீநுண்மிக்காகவே.

நாம் மனிதர்களின் போர்வையில் உழன்றுகொண்டிருப்பது ஒருவிதத்தில் மமதையைக் கொண்டுவந்துவிடாமல் இருக்கிற வளங்களையெல்லாம் கொள்ளையடித்துச் செல்லாமலிருக்கவேண்டி அந்த இயற்கையே இந்த 2020 ஆண்டில் தன் ஆற்றல்களைச் சேமிப்பதற்கான ஒரு ஓய்வும் தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான ஒரு நீண்டகால இளைப்பாறுதலாகவும் இந்த நீண்ட ஊரடங்குப்பொதுவிடுமுறைநாட்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் உயிரிழந்தவர்களி இழப்பு என்பது மீண்டும் கொண்டுவரமுடியாத இழப்புகள் என்பதில் நாம் ஒப்புக்கொண்டாகவேண்டும்.

அதேசமயம் இனியாவது இயற்கையில் மகோன்னதத்தை உணர்ந்து நாம் பொறுப்புணர்வுடன் பணி செய்தால் இயற்கையின் மீறல்களிலிருந்து நாம் தப்பிக்க உதவும்.

இன்று உலகெங்கும் 7 கோடி மக்களுக்கு மேல் கொரோனாநோத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 கோடிக்கும் அதிகமான மக்கள் இதிலிருந்து மீண்டுள்ளனர். 10.6 லட்சத்திற்கு மேல் மக்கள் உயிரிழந்துள்ளனர். நம் உயிர்களின் மகத்துவமும், உணவின் முக்கியத்துவமும், வேலையின் பயனையும் உதவும் மனப்பானையும் நாம் நன்கு அறிந்துகொள்ளவும் மனிதநேயத்தைப் போற்றவும் இக்கொரோனா மூலம்  நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என நேர்மையாக எடுத்துக்கொள்வோம்.

இதிலிருந்து நம்மால் மீள முடியும் என்று நம்பிக்கை கொள்வோம்.