58 விநாடிகளில் விற்று தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Mi Mix 2 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கிய 58 நொடிகளில் விற்றுத்தீர்ந்தது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது ஸ்மார்ட்போன்களை பிளாஷ் சேல் முறையில் விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் ஒரு மாடல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருவது வழக்கம். விற்பனை தொடங்கிய சில விநாடிகளிலே போன்கள் விற்று தீர்வதும் வழக்கம்.
தற்போது சியோமி நிறுவனம் இந்தியாவில் மெல்ல மெல்ல தனது ஷோரூமை நிறுவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் Mi Mix 2 மாடல் ஸ்மார்ட்போன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு நேற்று விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த 58 விநாடிகளில் விற்றுத்தீர்ந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக விற்பனையில் சியோமி நிறுவனம் முன்னேறி வருகிறது. சியோமி மற்றும் ஒரு சில ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.