தந்திரமான கில்லாடி அம்பானி!! சுய லாபத்திற்காக சூழ்ச்சியா?
ஜியோ பயனர்கள் இனி மற்ற நெட்வொர்க் நம்பருக்கு அழைப்புகளை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பின் பின்னர் அம்பானியின் சூழ்ச்சி உள்ளதாக தெரிகிறது.
தனியார் தொலைத்தொடர்பு துறையினர் ஒரு காலத்தில் இண்டர்நெட் டேட்டாக்களுக்கு அதிக கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் பெற்ற நிலையில் திடீரென இந்ததுறையில் நுழைந்த ஜியோ, இலவசங்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
மேலும் ஒருசில மாதங்களுக்கு ஒருமுறை சலுகைகளை வாரி வழங்கியதால் ஜியோ சிம் வாங்க பலர் ஆர்வம் காட்டினர். குறிப்பாக எந்த சிம்முக்கு பேசினாலும் இலவசம் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஜியோ சிம் வைத்துள்ளவர்கள் ஜியோ சிம் வைத்துள்ளவர்களுடன் பேசினால் மட்டுமே இனி இலவசம் என்றும், ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடபோன் நம்பர்களுக்கு அழைப்பு மேற்கொண்டால் கட்டணம் என்றும் தற்போது ஜியோ அறிவித்துள்ளது.
இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், அதே நேரத்தில் அதற்கு பதிலாக இலவச டேட்டா வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பிற்கு பின்னர் அம்பானியின் தந்திரம் உள்ளதாகவே தெரிகிறது.
ஆம், கடந்த ரிலையன்ஸ் பொதுக்கூட்டத்தில் ஜியோவின் இலக்கு 500 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது. எனவே, அந்த எண்ணிக்கையை அடைய ஜியோ நிறுவனத்திற்கு நிதி தேவைப்படும்.
இந்த நிதியை திரட்ட ஜியோ இம்மாதிரியான நடவடிக்கையை எடுத்திருக்ககூடும். அதோடு கடன் இல்லா நிறுவனமாக மாறவும் மற்ற நிறுவனங்களில் ரூ.9,000 கோடி முதலீடு செய்யவும் தேவைப்படும் நிதியை இப்படி வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற இந்த கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.