செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (10:20 IST)

ஜியோவால் யாருக்கு என்ன லாபம்??

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோவை அறிமுகம் செய்த போது அனைத்தையும் இலவசமாக வழங்கியது. 


 
 
இந்த இலவச சேவை மூலம் யாருக்கு என்ன லாபம் கிடைத்தது என்பது அனைவருக்கும் உள்ள கேள்வி. உண்மையில் லாபம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கா? இல்லை உரிமையாளருக்கா? 
 
சமீபத்தில், டிராய் ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால் இணைப்பிற்கு மட்டும் எவ்வளவு தொகை செலுத்தியது என்ற கணக்கை வெளியிட்டுள்ளது. 
 
ஜனவரி - மார்ச் 2017 காலாண்டு வரை சுமார் 1,500 கோடி ரூபாய் வாய்ஸ் கால் இணைப்பிற்காகப் பிற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் ஜியோவின் வருமானம் 321.5 கோடி ரூபாய்.
 
அதாவது பிற நெட்வொர்க்குக்கு ஜியோவின் வாய்ஸ் கால் இணைக்க ஒரு நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
 
இதன் படி ஜியோ ஒரு வாடிக்கையாளருக்கு மாதத்திற்கு 71.40 ரூபாய் இணைப்புக் கட்டணமாகச் செலுத்தியுள்ளது.
 
ஆனால், 321.5 கோடி ரூபாய் வருமானம் என்பது பிரைம் மெம்பர்ஷிப் கட்டணமாக வாடிக்கையாளர்கள் 99 ரூபாய் செலுத்தியது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இப்போ நீங்களே முடி பண்ணிக்கோங்க லாபம் பார்த்தது நீங்களா? அவங்களானு?....