செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (14:56 IST)

ப்ரீபெய்ட் யூசர்களுக்கு வோடபோனின் Long Term ப்ளான்!!

வோடபோன் ஐடியா ரூ. 997 விலையில் புதிய சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்வதற்கான தொகையை அதிகரித்தன. அதன்படி ஜியோ 555 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வீதம் 84 நாளைக்கு வழங்குகிறது. வோடஃபோன் இதே திட்டத்தை 599 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.
 
இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க வோடஃபோன் புதிய டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது. அந்த புதிய திட்டத்தின் கீழ் 997 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரூ. 499 மதிப்புள்ள வோடஃபோன் பிளே சந்தா, ரூ. 999 மதிப்புள்ள Zee5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். இத்துடன் 
 
இந்த சலுகை தற்சமயம் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படவில்லை. விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.