1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By

பட்ஜெட் + பாதுகாப்பு: டாப் 5 கார் பட்டியல் இதோ...

கார் வாங்குவது பலரின் கனவாக இருந்து வந்தாலும், இப்போதெல்லாம் தவனை முறை மூலம் கார் வாங்குவது எளிதாகியுள்ளது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தையில் உள்ள டாப் 5 கார்களின் பட்டியல் இதோ...
 
ஃபோக்ஸ்வேகன் போலோ:
ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட போது, ஏர் பேக் இல்லாமல் வந்தது. பின்னர் இதில் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு அனுப்பப்பட்டது. 
 
அப்போது, பெரியவர்களின் பாதுகாப்புக்கு 17 மதிப்பெண்ணுக்கு 12.54 மதிப்பெண் எடுத்து 3 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 29.91 மதிப்பெண் எடுத்து மூன்று நட்சத்திரமும் பெற்றது. பின்னர் இந்த காரில் ஏபிஎஸ் வசதி சேர்க்கப்பட்டது. இதன் விலை ரூ.5.42 லட்சத்தில் துவங்குகிறது.
 
டொயோடா இடியோஸ் லிவா:
டொயோடா நிறுவனத்தின் லிவா ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது கிராஷ் டெஸ்ட் சோதனையில் நான்கு நட்சத்திரக் குறியீட்டைப் பெற்றுள்ளது. 
 
பெரியவர்களின் பாதுகாப்புக்கு 16 மதிப்பெண்ணுக்கு 13 மதிப்பெண்களை எடுத்து நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 20.02 மதிப்பெண் பெற்றுள்ளது. 
 
ஏபிஎஸ், இபிடி, ஐசோபிக்ஸ் முக்கியமானவையாகும். முன்பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் பிரீடென்சனர் வசதியை கொண்டுள்ளது.
டாடா செஸ்ட்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு செஸ்ட். இது பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 11.15 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 15.52 மதிப்பெண் எடுத்து 2 நட்சத்திரங்களையும் பெற்றது. 
 
இந்த கார் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் வந்துள்ளது. டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஏபிஎஸ், இபிட. வசதிகள் மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் வசதியுடன் வந்துள்ளது. இதன் விலை ரூ.5.48 லட்சத்தில் துவங்குகிறது.
 
டாடா நெக்சான்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாடல்களில் எஸ்யுவி மாடல் இது. டாடா நெக்சான் கிராஷ் டெஸ்டில் நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 13.56 மதிப்பெண்களைப் பெற்று 4 நட்சத்திரங்களைப் பெற்ற இந்த கார், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்களை எடுத்து 3 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது.
 
இந்த மாடலில் அனைத்து நெக்சான் கார்களும் 2 ஏர் பேக்குகளைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் பேஸ் மாடல் கார் விலை ரூ. 5.99 லட்சத்தில் தொடங்குகிறது. 
மாருதி விடாரா பிரெஸ்ஸா:
மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யுவி விடாரா பிரெஸ்ஸா. இந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 12.51 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களை வென்றுள்ளது. 
 
விடாரா பிரீஸாவின் அனைத்து மாடலிலும் 2 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., முன்புற சீட் பெல்ட் பிரீடென்சனர்ஸ் வசதிகளோடும், டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டருடனும் வந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்புக்கு இதில் ஐசோபிக்ஸ் வசதியும் உள்ளது.