Daily Horoscope
✕

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

Written By Mahendran
Updated: சனி, 18 மே 2024 (11:28 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,850 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 உயர்ந்து ரூபாய் 54,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,320  எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 96.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

AI கத்துக்கிட்டா வாரத்துல 3 நாள்தான் வேலை!.. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கருத்து...

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

சென்னையில் 2 லூலு சில்லரை விற்பனை நிலையங்கள் திறப்பு.. முதல் நாளே அலைமோதிய கூட்டம்...

இன்று பகலில் பெய்த மழை வெறும் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. தமிழ்நாடு வெதர்மேன்

இனிமே எங்க வழி தனி வழி!... தனி ரூட்டில் பயணிக்கப்போகும் திமுக!...

அடுத்த கட்டுரையில்
Show comments