சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு.. இன்னும் உயருமா?

Written By Mahendran
Updated: சனி, 27 ஏப்ரல் 2024 (17:36 IST)
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த வாரம் 55 ஆயிரம் என இருந்த தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றும் ஒரு சவரனுக்கு ரூ.120 தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,770 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 54,160 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,240 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 87.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா வேதனை!...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. புதிய மசோதா தாக்கல்?

பழனி கோவில் நில விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளருக்கு முன்ஜாமீன்...!

தவெகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர்

மக்கள் தொகை கணக்கெடுப்பு சுய விவரங்களை பதிவு செய்தார் முதல்வர் விஜய்... பதிவு வைரல்..

அடுத்த கட்டுரையில்
Show comments