செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (10:45 IST)

இன்று ஒரே நாளில் 800 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 100 ரூபாயும் ஒரு சவரனுக்கு 800 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,940  என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 47,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,410 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 77.00எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran