வலுக்கட்டாயமாக வேலையை இழந்தவர்களுக்கு இன்சூரன்ஸ்: டிசிஎஸ் அறிமுகம்
வலுக்கட்டாயமாக தங்கள் வேலையை இழந்துள்ளவர்கள் புதிய வேலை தேடி வரும் போது அவர்களுக்கு உதவுவதற்காகவும், பண ஆதாயம் அளிக்கவும் டிசிஎஸ் இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பம் நிறுவனமான டிசிஎஸ், அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி, ரோட் தீவு மற்றும் மைனே (MRM) கூட்டமைப்புகளில் உள்ள பணியில் இருந்து நீக்கப்பட்டோருக்கு புதிய இன்சூரன்ஸ் முறையை அறிமுகப்படுத்துகிறது.
அமெரிக்காவிலேயே முதலாவதாக வலுக்கட்டாயமாக வேலையை இழந்துள்ளவர்களுக்கு இந்த புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திவுள்ளனர்.மேலும் ரோட் தீவு மற்றும் மைனேவில் அடுத்த ஆண்டிற்குள் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
எம்ஆர்எம் கூட்டமைப்புடன் இணைந்து இந்த வலுவான பல மாநில வேலையின்மை காப்பீட்டு நவீனமயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராக உள்ளதாக டிசிஎஸ், அரசு தொழில் தீர்வுகள் பிரிவின் உலக தலைவர் டான்மொய் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.