ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.... இந்த தகவல் உங்களுக்குத்தான்!!

வாடிக்கையாலர்கள் பணம் எடுக்கவும் போடவும் மற்ற பல சேவைகளுக்கும் வங்களிக்கு நேரடியாக சென்று வந்த காலம் போய் இப்போது அனைத்தும் இணைய சேவையாக மாறியுள்ளது. 
 
அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி வழங்கும் வங்கி செயலிகளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. ஸ்டேட் பாங்க் ஃப்ரீடம் ஆப்:
ஸ்டேட் பாங்க் ஃப்ரீடம் ஆப் செயலியின் மூலம் வங்கி கணக்கின் இருப்பு நிலை விசாரணை, பணம் அனுப்புதல், ரீசார்ஜ் மற்றும் போன் பில் செலுத்துதல் போன்ற பணிகளை செய்யலாம்.
 
2. எஸ்பிஐ குவிக் ஆப்:
இது மிஸ்டு கால் வங்கி அழைப்பு சேவையாகும். இதன்மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வங்கிக்கு மிஸ்டு கால் அளித்து தகவல்களை பெறலாம். 
 
3. ஸ்டேட் பாங்க் பட்டி:
இந்த ஆப் 13 மொழிகளில் கிடைக்கிறது. இதன் மூலம் பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பாக்கிகளை வசூலிப்பதற்கான விழிப்பூட்டல்கள், கணக்கில் கூடுதல் பணத்தை சேர்த்தல், ரீசார்ஜ் மற்றும் பில்களை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யவது போன்ற அம்சங்கள் வழங்கபப்ட்டுள்ளன. 
4. ஸ்டேட் பாங்க் எம் கேஷ்: 
இந்த ஆப் மூலம் மூன்றாம் நபருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், பணம் பெருவோரை பெனிஃபீஷ்யரில் (beneficiary) சேர்க்காமலே நேரடியாக மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் பயன்படுத்தி பணம் அனுப்ப இயலும். 
 
5. எஸ்பிஐ காரட்: 
எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை ஆன்ட்ராய்டு சாதனத்தின் மூலம் உடனடியாக அணுகலாம். இந்த செயலியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு பில்கள் சரிபார்க்கலாம், கட்டணம் செலுத்தலாம்.
 
6. ஸ்டேட் பாங்க் யெனிவேர்:
இந்த செயலி எஸ்பிஐ ரீடெய்ல் இணைய வங்கி வாடிக்கையாளர்கள் எளிதாக பில் கட்டணங்கள் செலுத்த, ரீசார்ஜ் செய்ய, பயனர்களின் நிதி மேலாண்மையில் உதவுவதற்காக உதவுகிறது. 
 
7. ஸ்டேட் பாங்க் சமாதான்:
எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களுக்கு இந்த அம்சம் பயன்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் வீட்டு கடன், கல்வி கடன் போன்ற வட்டி சான்றிதழ்களை உறுவக்கி மின்னஞ்சல் மூலம் பெறலாம்.
 
8. ஸ்டேட் பாங்க் யெனிவேர் கார்ப்ரேட்:
ஸ்டேட் பாங்க் யெனிவேர் கார்ப்ரேட், கார்ப்ரேட் இணைய வங்கி சேவைக்கான மொபைல் பயன்பாடு செயலியாகும்.