சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விவரங்கள் லீக்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் வரும் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
# 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர், அட்ரினோ 616 GPU
# 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
# 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 3800 எம்ஏஹெச் பேட்டரி