திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (10:24 IST)

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும்: யாரும் அறியாத தொடர்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்கி வர்தக தொடர்பை வலுபடுத்தி வருகிறது.


 
 
இந்நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூ.66,000 கோடி டிவிடெண்டாக மத்திய அரசுக்குக் இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
 
80 வருட ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் மத்திய அரசுக்குக் கொடுத்த டிவிடெண்ட் தொகை இந்த ஆண்டுதான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.52,679 கோடியும், 2013 ஆம் ஆண்டு ரூ.33,100 கோடியும், 2012 ஆம் ஆண்டு ரூ.16,010 கோடியும், 2011 ஆம் ஆண்டு ரூ.15,009 கோடியையும் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி டிவிடெண்டாக அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.