கோடிகளில் லாபம் பார்க்கும் ஜியோ: 3வது முறையாக பங்கு விற்பனை!
ரிலையன்ஸ் நிறுவனம் சமீப காலமாக தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை அதாவது, ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதாவது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் எனும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. ஆம் இந்நிறுவனம் ஒரு சதவிகித பங்குகளை ரூ 5,655.75 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 2.3% பங்குகளை அமெரிக்க தொழில்நுப நிறுவனமாக விஸ்டாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு ₹11,367 கோடி. இதன் மூலம், ஜியோ நிறுவனம், ₹60596.37 கோடி முதலீடுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.