Daily Horoscope
✕

4 மில்லியன் சேல்ஸ்: பட்ஜெட் விலையில் சாதனை படைத்த ரெட்மி!

Updated: புதன், 3 ஏப்ரல் 2019 (18:31 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன் குறுகிய காலத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும், இதுவரையில் ரெட்மியின் பதிப்புகளில் இந்த ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்தான் குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்டுள்ளதாக இருந்தது. 
 
எனவே, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அதிக அளவில் வாங்கியுள்ளனர். 9,999 ரூபாய்க்கு ரெட்மி நோட் 7,  4ஜிபி ராம் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 13,999 ரூபாய்க்கு, 6ஜிபி ராம் 16,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 
 
இதனாலேயே உலகம் முழுவதும் 4 மில்லியன் ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்கள் விற்று தீர்ந்துள்ளது. இது சியோமிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். ஆன்லைனில் மட்டும் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட ஒரு நாள் மட்டுமே விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் வெற்றி!. உடனே அன்புமணிக்கு போட்ட முதல்வர் விஜய்!...

ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..

டெல்லியில் நாளை கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி போராட்டம்.. மெட்ரோ ரயில்கள் ரத்து...

டிரம்புக்கு மீண்டும் ஏமாற்றம்.. தமிழ் பெண்ணுக்கு கிடைத்தது அமைதிக்கான நோபல் பரிசு..

மே மாதம் 81,100 வாக்குகள், தற்போது 35,411 மட்டுமே.. தாராபுரம் அதிமுக கோட்டையா இல்லை ஓட்டையா?

அடுத்த கட்டுரையில்
Show comments