செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:36 IST)

விரைவில்... ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்(ஸ்)!!

ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக் அறிவித்துள்ளது. 
 
ஆம், ரியல்மி நிறுவனம் ரியல்மி நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ மற்றும் நார்சோ 20ஏ என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை அனைத்தும் செப்டம்பர் 21 ஆம் தேதி அறிமுகம் ஆகும். 
 
புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.