இந்திய சந்தையில் உள்ள நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் பிராண்ட் எது??
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் மக்கள் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் எது என்ற ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் நம்பத் தகுந்த பிராண்ட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் பிராண்ட் இந்தியாவின் நம்பத் தகுந்த பிரான்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆப்பிள் மற்றும் விவோ அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்திய சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்து வரும் நிலையிலும், இந்தியர்கள் அதிகம் விரும்பும் நிறுவனமாக ஒன்பிளஸ் இருந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் விரும்பும் ஸ்மார்ட்போன் பிராண்டாக இருக்கிறது.