விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு; ரிசர்வ் வங்கி

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:04 IST)
புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
இந்த நிதியாண்டின் இறுதியில் மார்ச் மாதம் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறைவு பெறும். அதனைத்தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கும். படிப்படியாக திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் வெளியான புதிய ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் மாற்றம் பெற்றதால் ஏடிஎம் வழியாக மக்களுக்கு கிடைக்கவில்லை மாறாக வங்கிகள் மூலமாகவே மக்களை சென்று சேர்ந்தது. அதுபோல புதிதாய் அச்சடிக்கப்பட உள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவே எளிதாக ஏடிஎம் வழியாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments