ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (12:04 IST)

டிக் டாக்கை ப்ளே ஸ்டோரில் இருந்து தூக்கிய கூகுள்

அனைத்து வயது தரப்பு மக்களுடம் டிக் டாக் செயலியை பயன்படுத்தினர். பல்வேறு வகையில் டிக் டாக் என்னும் செயலி தீமை தருவதால், அதை தடை செய்யக்கோரி கோரிகைகள் எழுந்தன.  
 
அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு, டிக் டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்றும் டிக் டாக் தடை செய்யப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
அதோடு, ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தனர். இதனை ஏற்று தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கியுள்ளது. 
 
டிக் டாக் என்னும் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.