டெல் நிறுவன சி.இ.ஓ: 53 மில்லியன் டாலர் நிதி!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கியதில் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும் மீட்பு பணியை தொடங்க முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் இருக்க இடமின்றியும், உண்ண உணவின்றியும், குடிக்க தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் அதிபர் டிரம்ப் தனது பணத்தில் இருந்து 1 மில்லியன் டாலரை நிவாரண நிதியாக வழங்கினார். இந்நிலையில் தற்போது டெல் நிறுவன சி.இ.ஓ நிதி உதவு வழங்க முன்வந்துள்ளார்.
இவர் ஏற்கனவே 17 மில்லியன் டாலரை நிவாரணமாக வழங்கியுள்ள நிலையில் மேலும் 36 மில்லியன் டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளார்.