1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2016 (15:46 IST)

ரிலையன்ஸ் ஜீயோவை சமாளிக்க கூட்டு சேரும் பிஎஸ்என்எல் - வோடாபோன்

பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஆகிய இரண்டு நிறுவனமும் நாடு முழுவதும் ஒருவருக்கொருவர் சொத்துக்கள் மற்றும் நெட்வொர்க் அனுமதி போன்றவைகளை பயன்படுத்த ஒரு 2ஜி இன்ட்ரா-சர்க்கிள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடபோவதாக அறிவித்துள்ளன.


 
 
இந்த இரண்டு நிறுவனங்கள் கணக்கில் நாடு முழுவதும் 2,50,000 டவர்கள் இயங்குகின்றன. கையெழுத்தாகும் இந்த ஒப்பந்தம் மூலம் நகர்ப்புற பகுதிகளில் பிஎஸ்என்எல் நுழைவும், கிராமப்புற பகுதிகளில் வோடபோன் நுழைவும் உறுதி செய்யப்படும்.
 
குரல், டேட்டா பயன்பாடு என எதுவாக இருப்பினும் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையான, ஒரு உயர்ந்த பிணைய அனுபவத்தை வழங்க இருப்பதாக வோடஃபோன் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
பிஎஸ்என்எல் உடனான இந்த ஒப்பந்தமானது குறிப்பாக கிராமப்புற பகுதிகள் மற்றும் நாட்டின் கடற்கரை பகுதிகளின் பிணைய மேம்பாட்டை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மறுபுறம், வோடாபோன் உடனான இந்த கூட்டணி பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் கொண்டு சென்று, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சேவைகளை வழங்க உதவும் என்று பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,  தெரிவித்துள்ளனர்.