1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (11:32 IST)

ஜியோவுக்கு தலைவலி: ஆஃபரில் செக் வைக்கும் பிஎஸ்என்எல்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. ரீசார்ஜ் கட்டணத்தில் சலுகைகள் மட்டுமின்றி டேட்டாவிலும் சலுகைகளை வழங்கிவருகிறது. 
 
இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன. ஏர்செல் நிறுவனம் ஏற்கனவே திவால் ஆன நிலையில், வோடபோன் மற்றும் அடியா நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. 
 
தற்போது உள்ள சூழ்நிலையில், ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனக்கள் தணித்து தாக்குபிடித்து வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் தற்போது ஜியோவுக்கு போட்டியாக சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 
 
அதில், ரூ.1,999 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புது சலுகை ரூ.1,999 சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், ரூ.1,999 விலையில் ஜியோ வழங்கும் சேவையில் 180 நாட்களுக்கு 125 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.