ஜியோ, ஏர்டெல்லுக்கு சவால் விடும் BSNL புது பிரீபெயிட் ப்ளான்!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புத்ய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 997 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் வழங்கியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியொ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏனெனில் ஜீயொ, ஏர்டெல் நிறுவனங்கள் இதே விலையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சேவையை வழங்கி வருகிறது.
ஏர்டெல் ரூ. 998-க்கு 336 நாட்கள் வேலி்டிட்டியுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 12 ஜிபி டேட்டா வழங்குகிறது.
ஜியோ ரூ. 999-க்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடன், 60 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.ஆகியவற்றை வழங்குகிறது.