திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 மார்ச் 2017 (17:20 IST)

2016-17 வங்கி மோசடி பட்டியல் வெளியீடு: ஐசிஐசிஐ மோசடியின் கிங்!!

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 


 
 
இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்திலும், நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டாவது இடத்திலும் உள்ளது.
 
ஐசிஐசிஐ வங்கியின் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 455 ஆகவும், எஸ்பிஐ வங்கியில் 429 ஆகவும், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் 244 ஆகவும், ஹெச்டிஎப்சி வங்கியில் 237 ஆகவும், ஆக்ஸிஸ் வங்கியில் 189 மோசடி வழக்குகளும், பாங்க் ஆப் பரோடாவில் 176 மோசடி வழக்குகளும், சிட்டி வங்கியில் 150 மோசடி வழக்குகளும் நடந்துள்ளன.
 
மோசடிகளின் மதிப்பு அடிப்படையில் எஸ்பிஐ வங்கியில் ரூ.2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளன. அடுத்ததாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.2,250.34 கோடிக்கும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1998.49 கோடிக்கும் மோசடிகள் நடந்துள்ளன.
 
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை சேர்த்து மொத்தம் 3,870 மோசடிகள் வங்கிகளில் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.17,750.27 கோடி என்றும் தெரியவந்துள்ளது.