ரியல் எஸ்டேட்: இது என்ஆர்ஐ-களுக்கான பகுதி!!
அயல்நாடுகளில் வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களில் முதலீடு செய்யும் முன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சிலவற்றை இங்கு காண்போம்...
இந்திய ரியல் எஸ்டேட் சட்டம், 2016 ஆம் ஆண்டு மே முதல் தேதியில் நடைமுறைக்கு வந்தது. தற்போது இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக மாறியுள்ளது.
இந்தியாவில் வீடூ, மனை வியாபாரம் செய்ய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்தியப் பிரதிநிதி சட்டப்படி பவர் ஆஃப் அட்டர்னியை தவறான முறையில் பயன்படுத்தி இதர தரப்பினரையும் ஏமாற்றலாம் என்கிற உண்மையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, என்ஆர்ஐ-கள் தங்கள் சொத்துகளை இந்தியாவில் உள்ள யாரிடமாவது கொடுத்துவிட்டு செல்லும் போது அந்த நபரின் நம்பகத்தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பவர் ஆஃப் அட்டர்னியை எழுதி கொடுக்கும் முன் பல முறை யோசித்து எந்த சிக்களும் ஏமாற்றங்களும் வராது என்ற நிலையின் இதனை செய்யலாம்.