ஐபோன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள்: இதெல்லாம் ஒரு காரணமா?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. ஆகிய மாடல்களின் விற்பனையை நிறுத்தவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மாடல்களின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட ஐபோன் மாடல்கள் எல்லாம் பழைய மாடல்களாக ஆன் அநிலையில் அதை திரும்பி பெற்றுக்கொள்வதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் பிரீமியம் ஐபோன் மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
விற்பனை நிறுத்தம் பற்றிய தகவல் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை குழுவினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாம்.