1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (13:48 IST)

ஜியோவின் கொட்டத்தை அடக்கிய டிராய்: ஏர்டெல், வோடபோன் கப்சிப்!

டிராய் மொபைல் ரிங்கிங் டைம்  30 வினாடிகளாக இருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 
 
இதுநாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் அவுட்கோயிங் கால்களுக்கான ரிங்கிங் நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரிங்கின் நேரத்தை அதிரடியாக 20 விநாடிகளாக குறைத்தது. 
 
இதனை ஏர்டெல் நிறுவனம் கடுமையாக எதிர்த்து டிராய்-க்கு புகார் கடிதம் ஒன்றை வழங்கியது. இதன் பின்னர் டிராய் அறிவுறுத்தலை ஏற்று ஜியோ தனது ரிங்கிங் நேரத்தை 20 விநாடிகளில் இருந்து 25 விநாடிகளாக அதிகரித்தது. இதன் பின்னர் ஏர்டெல், வோடபோன் போன்ற மற்ற நிறுவனங்களும் தங்களது ரிங்கிங் நேரத்தை குறைத்தது. 
 
இந்நிலையில், தரைவழி தொலைபேசி மற்றும் செல்போன் சேவைகள் தொடர்பான சட்டத்தில் புதிய திருத்தங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மேற்கொண்டது. இந்த திருத்தங்களில் ரிங்கிங் டைம் குறித்தும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 
 
அதன்படி, மொபைல் அழைப்பு மணி ஒலிக்கும் நேரம் 30 வினாடிகளாகவும்,   தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும் நேரம் 60 வினாடிகளாக இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.