வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (13:59 IST)

ஜியோவுக்கு ஊஊ... அதிவேக நெட்வொர்க் முந்தியது ஏர்டெல்: ஓக்லா ரிபோர்ட்!!

ஏர்டெல் நிறுவனம் அதிவேக மொபைல் நெட்வொர்க் வழங்குவதில் முதலிடம் பிடித்துள்ளதாக ஓக்லா தெரிவித்துள்ளது. 
 
ஓக்லா நிறுவனம் மொபைல் போன்களில் டவுன்லோடு செய்யப்படும் வேகத்தை வைத்து எந்த நெட்வொர்க் நிறுவனம் அதிவேக நெட்வொர்க் சேவையை வழங்கியுள்ளது என கணக்கிட்டு தகவல் வெளியிட்டுள்ளது. 
 
ஓக்லாவின் கூற்றுப்படி, கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் இணைய சேவையின் வேகம் குறைவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. 
எனவே இதை சாதகமாக பயன்படுத்தி ஜியோவை பின்னுக்குத் தள்ளி ஏர்டெல் முன்னணியில் இருப்பதாக கூறியுள்ளது ஓக்லா. அதேபோல வோடபோன் நிறுவனம் எவ்வித ஏற்றம் இறக்கமும் இன்றி சீரான வேகத்தை வழங்கி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. 
 
ஹைலைட்டாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு ஜூலை மாதம் வரை ஏர்டெல் நிறுவனமே வேகமான சேவையை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது ஓக்லா நிறுவனம்.