1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 8 மே 2019 (13:38 IST)

5ஜி-க்கு அடி போட்ட ஜியோ; சொத்தை விற்கும் ஏர்டெல்

ஜியோ 5ஜி நெட்வொர்க் குறித்து அடிப்போட்டு உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் சொத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என தெரிகிறது. 
 
இந்தியாவில் மக்கள் அனைவரும் 3ஜி சேவையில் இருந்து 4ஜி-க்கு மாறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், 5ஜி நெட்வொர்க் குறித்து மத்திய அரசும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  
 
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து, இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வலையில் சாம்சங் மற்ரும் எல்.ஜி ஏற்கனவே 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளன.  
 
எனவே மத்திய அரசு 5ஜி நெட்வொர்க் சேவையை இந்தியாவில் துவங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, 5ஜி மொபைல்போன் அலைவரிசை ஒதுக்கீடு இந்தியாவில் ஜூன் மாதம் துவங்கவுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே. 
இந்நிலையில் ஜியோ 4ஜி-ல் இருந்து வாடிககையாளர்களுக்கு 5ஜி நெட்வொர்க் வழங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாம். எனவே ஏர்டெல்லும் 5ஜி குறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளதாம். 
 
ஏற்கனவே ஜியோ வழங்கிய சலுகைகளால் வாடிக்கையாளர்களையும் இழந்து வருமானத்தை இழுந்து சரிவில் இருக்கும் ஏர்டெல், ஜியோ போல் 5ஜி சேவையை வழங்க வேண்டும் என்றால் ஏர்டெல் பங்குகளையும், சொத்துக்களையும் விற்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.