ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 16 நவம்பர் 2016 (17:48 IST)

3 மாதத்தில் 3 கோடி ஸ்மார்ட்போன்கள்!!

3 மாதங்களில் 3 கோடியே 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ளன என ஐடிசி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


 
 
கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 2 கோடியே 91 லட்சம் அளவுக்குத்தான் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்துக்கு வந்தன. தற்போது முதல் முறையாக 3 கோடி அளவை தாண்டியுள்ளதாக ஐடிசி தெரிவிக்கிறது.
 
பண்டிகைக் காலங்கள் அதிகம் வந்ததால் இந்த சீசனில் அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஸ்மார்ட்போன்களில் சாம்சங் 23%, லெனோவா மற்றும் மோட்ட ரோலா 9.6%, மைக்ரோமேக்ஸ் 7.5% அளவுக்கு சந்தையைப் பிடித்துள்ளன. ஜியோமி 7.4%, ரிலையன்ஸ் ஜியோ 7% சதவீத சந்தையைப் பிடித்துள்ளன.
 
ஆன்லைனில் ஸ்மார்ட்போன் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.