தற்போது சீசன் காலம் என்று எண்ணி ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கு பெய்து வரும் தொடர் மழையால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஊட்டியில் சீசன் துவங்கும். இந்த மாதங்களில் காலையில் வெயிலும், மாலையிலும் சாரல் மழையும், இரவில் குளிருமாக ஊட்டியே சில்லென்று இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக காலையிலேயே மழை துவங்கிவிடுகிறது. இரவு மழையுடன் கடுங்குளிரும் நிலவுகிறது. இதனால் குளிரைத் தாங்க முடியாமல் பயணிகள்...