1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. மு‌ன்னோ‌ட்ட‌ம்

‌விரை‌வி‌ல் ''தா‌‌ய் கா‌விய‌ம்'' பட‌ப்‌‌பிடி‌ப்பு !

தா‌‌ய் கா‌விய‌ம் பட‌ப்‌‌பிடி‌ப்பு
 பா.‌ விஜ‌ய்
பாவலராக இரு‌க்கு‌ம் பா.‌ விஜ‌ய்யை நாயகனா‌க்‌கி‌யிரு‌க்கு‌ம் பட‌ம் 'தா‌ய் கா‌விய‌ம்'. பா‌லி ஸ்ரீர‌ங்க‌ம் இய‌க்கு‌ம் இ‌ப்பட‌த்‌தி‌ன் பட‌ப்‌பிடி‌ப்பு ‌பி‌ப். 10 ஆ‌ம் தே‌தி‌க்கு மே‌ல் தொட‌ங்க‌த் த‌ி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

ர‌ஷ்யா‌வி‌ன் புக‌ழ்பெ‌ற்ற எழு‌த்தாள‌ர் மா‌க்‌சி‌‌ம் கா‌ர்‌க்‌கி‌யி‌ன் கால‌த்தா‌ல் அ‌ழியாத படை‌ப்பான 'தா‌ய்' பு‌தின‌த்தை‌த் தழு‌வி 'தா‌ய் கா‌விய‌ம்' எடு‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ப்பட‌த்‌தி‌ல் புர‌ட்‌சிகர இளைஞனாக நாயக‌ன் வேட‌த்‌தி‌ல் நடி‌ப்பதுட‌ன் பட‌த்‌தி‌ன் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளி‌ல் ஒருவராகவு‌ம் இரு‌க்‌கிறா‌ர் பா.‌விஜ‌ய்.

இத‌ன் பாட‌ல் கா‌ட்‌சி‌க்காக செ‌ன்ற வருட‌ இறு‌தி‌யி‌ல் 'தா‌ய் கா‌விய‌ம்' பட‌ப்‌பிடி‌ப்பு‌க் குழு ‌சீனா செ‌ன்றது. அ‌ங்கு இர‌ண்டு பாட‌ல் கா‌ட்‌சிக‌ள் படமா‌க்க‌ப்ப‌ட்டன.

இ‌ந்த மாத‌ம் 10 ஆ‌ம் தே‌தி‌க்கு மே‌ல் 'தா‌ய் கா‌விய‌த்‌தி‌ன்' பட‌ப்‌பிடி‌ப்பு த‌மிழக‌த்‌தி‌ல் தொட‌ங்க‌ இரு‌க்‌கிறது. அத‌ற்கான லொகே‌ஷ‌ன்களை ஏ‌ற்கனவே இய‌க்குந‌ர் பா‌லி ஸ்ரீர‌ங்க‌ம் தே‌ர்வு செ‌ய்து‌வி‌ட்டா‌ர்.

பட‌த்‌தி‌ல் பா.‌ விஜ‌யி‌ன் தாயாக நடி‌க்க கு‌ஷ்புவுட‌ன் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌ந்து வரு‌கிறது.