மண்டேலா பிறந்தநாள் விழாவில் வில் ஸ்மித்!
|
மிகப்பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்சன் மண்டேலாவின் தீவிர ரசிகரான ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவியுடன் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதில் கிடைக்கும் பணம் மண்டேலாவின் எய்ட்ஸ் சாரிட்டிக்கு வழங்கப்படுகிறது. இந்த சாரிட்டியின் பெயர், 46664.
1964 முதல் 1990 வரை மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த நம்பர் இது.
சோதனைகள் சில நேரம் சரித்திரமாகும். இது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
