1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

படம் பார்த்தால் பரிசு ஐந்து லட்சம்!

Poonk ராம்கோபால் வர்மா
தனது புதிய படம் பூங்க் (Poonk)கின் டிரெயிலர் வெளியீட்டையொட்டி நேற்று சென்னை வந்தார் ராம்கோபால் வர்மா.

வர்மாவின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. தயாரித்த படங்களும், இயக்கிய படங்களும் ரொம்ப சுமார். கடைசியாக வந்த சர்க்கார் ராஜ் இழந்த பெயரை ஓரளவு மீட்டெடுத்தது.

ஆகஸ்ட் 22 வர்மாவின் புதிய த்ரில்லர் பூங்க் வெளியாகிறது. பிளாக் மேஜிக்கை பின்னணியாகக் கொண்ட மிரட்டும் த்ரில்லர்.

இவரது 'பூத்' திரைப்படம் லாபத்தை சம்பாதித்ததோடு, பாலிவுட்டின் ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்தது. அந்த மேஜிக் பூங்க விஷயத்தில் நிகழுமா?

இந்தப் படத்தை தனியாக திரையரங்கில் முழுதாக பார்ப்பவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்க உள்ளாராம் வர்மா.

இதய பலமுள்ளவர்கள் பரிசுத் தொகைக்கு முயற்சி செய்யலாம்!