1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

படிக்காதவன் படப்பிடிப்பு நிறுத்தம்!

படிக்காதவன் படப்பிடிப்பு சுராஜ் தனுஷ்
தனுஷ், தமன்னா நடிக்கும் படிக்காதவன் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக நடக்கவில்லை.

சுராஜ் இயக்கும் இப்படத்தில் ரயில்வே ஸ்டேஷன் காட்சிகள் எடுக்கத் திட்டமிட்டு செட் போடப்பட்டதாம். செட் திருப்தியளிக்காமல் சென்ட்ரல் ஸ்டேஷனிலேயே எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார்களாம். இதற்காக தென்னக ரயில்வேயிடம் அனுமதி கேட்டு காத்திருக்கிறது படிக்காதவன் டீம்.

அனுமதி வர 10, 15 நாட்கள் ஆகுமாம். இதற்கிடையில் படத்தின் இயக்குனர் சுராஜுக்கும், தனுஷுக்கும் முட்டல், மோதல் என்கிற வதந்தியும் உலவிக் கொண்டுதான் இருக்கிறது.

சொல்லிக் கொடுக்கிற வசனத்தைப் பேசாமல் தனது இஷ்டத்துக்கு சிலவற்றை சேர்த்து பேசினாராம் தனுஷ். இது தொடர்பாக ஏற்பட்ட விவாதத்தில்தான் இயக்குநர் சுராஜுக்கும் தனுஷுக்கும் உரசல் என்றும் பேச்சு அடிபடுகிறது. படப்பிடிப்பு நிறுத்தமும் அதை யோசிக்க வைக்கிறது.
About Writer
Akshesh Savaliya