1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தள்ளிப்போகும் மர்மயோகி தொடக்கவிழா!

மர்மயோகி கம‌ல் பிரமிட் சாய்மீரா
ஜூலை இரண்டாவது வாரத்தில் நடப்பதாக இருந்த கமலின் மர்மயோகி படத்தின் தொடக்க விழா ஜூலை 25க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முதல் காப்பி அடிப்படையில் மர்மயோகியை பிரமிட் சாய்மீரா தயாரிக்கிறது. இது இந்தியிலும் தயாராவதால் மும்பையில் படத் தொடக்க விழாவை கமல் பிரமாண்டமாக நடத்துகிறார். இதற்காக மட்டும் அவர் 50 லட்சம் செலவிடயிருப்பதாக கூறப்படுகிறது.

மர்மயோகிக்கு முதல் தவணையாக நான்கரை கோடி ரூபாயை பிரமிட் சாய்மீரா கமலுக்கு தந்துள்ளதாம். ஆறாம் நூற்றாண்டு கதையான இதற்கு செலவு 80 கோடிகள்.

பல வெளிநாடுகளிலும் மர்மயோகி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் கமல்.
About Writer
Webdunia