1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

இளங்கண்ணன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா!

பீமா ஸ்ரீ சூர்யா மூவிஸ் இளங்கண்ணன்
பீமா படத்தை தயாரித்த ஏ.எம். ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் அடுத்து இளங்கண்ணன் இயக்கும் படத்தை தயாரிக்கிறது.

தெலுங்கு ரீ-மேக்கான இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றார் இளங்கண்ணன். இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் ரவிகிருஷ்ணாவும், இன்னொரு ஹீரோவாக தெலுங்கு நடிகர் ஒருவரும் நடிக்கிறார்கள்.

ஹீரோயினாக நடிக்க கமலினி முகர்ஜியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. பிரிவோம் சந்திப்போம் படத்திலிருந்து விலகிய கமலினி பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவரது ரீ-என்ட்ரியாக இப்படம் அமையலாம்!
About Writer
Webdunia